தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் வசதிக்காக பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. திமுக ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இயங்கும் 1500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 7200 புதிய பேருந்துகள் வாங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் ஆயிரம் பேருந்துகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 200 புதிய பேருந்துகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.