
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு முதல் அடுத்தடுத்து பல மாவட்டங்களில் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.