
இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செப்.11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், இரு மாவட்டங்களிலும் 10, 11ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது