தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அரசு ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.