கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில், விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சருக்கான செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்:

உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளராக கே.கோபால் நியமனம்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம்.

கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையராக சுந்தரவள்ளி நியமனம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக விஷ்ணு சந்திரன் நியமனம்.

கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளராக அமுதவள்ளி நியமனம்.

சமூக நல ஆணையராக லில்லி நியமனம்.

ஜவுளித்துறை இயக்குனராக லலிதா நியமனம்.

பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமனம்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பாக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை செயலாளர் விஜயகுமாருக்கு மனித வள மேலாண்மைத் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு

தமிழ்நாடு மின்சார வாரிய தலைவராக நந்தகுமார் நியமனம்

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக தலைவராக தர்மேந்திர பிரதாப் யாதவ்

‘RUSA’ மாநில திட்ட இயக்குநராக ஸ்வர்ணா

பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (வருவாய், நிதி) பிரதிவிராஜ்

தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை துணைத் தலைவராக ஜெயகாந்தன்