தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். கனமழையின் போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.