
தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த நிலையில் ஒரு லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மகளிர் உரிமைத்தொகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில் பரிசீலனையில் உள்ளவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டியில் புதிய ரேஷன் கார்டுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் கூடுதலாக மக்களுக்கு கோதுமை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு காத்திருப்போர் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.