
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, கோவை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை ஆனது பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.