
தமிழகத்தில் ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரைந்து செயல்படுத்தவில்லை எனில் மானியம் வழங்கப்படாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த மறு சீரமைப்பு திட்டத்திற்காக மத்திய அரசு 6360 கோடி கடன் வழங்குகிறது. இந்நிலையில் இந்த நிதியாண்டுக்குள் ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டங்களை முடித்து விட்டால் மத்திய அரசின் கடனை திரும்ப செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
அந்த கடன் மானியம் ஆகிவிடும். ஒருவேளை இந்த திட்டத்தை நடப்பு நிதி ஆண்டுக்குள் முடிக்கவில்லை எனில் வட்டியுடன் கடனை மத்திய அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும். இதன் காரணமாக ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தவில்லை எனில் மறு சீரமைப்புக்கான மானியம் வழங்கப்படாது என அறிவித்துள்ளது.