தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகின்றது.

அதன்படி 10ம் வகுப்பு தோல்வி அடைந்திருந்தால் மாதம் 200 ரூபாய், தேர்ச்சி பெற்றிருந்தால் 300 ரூபாய், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு 600 ரூபாய், ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை மொத்தமாக வங்கிக் கணக்கில் வர வைக்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.