
தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய திட்டங்களில் விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் குறித்த விவரங்களை எளிதாக அறிவதற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள பல சிக்கல்கள் ஏற்படும் நிலையில் போட்டோ அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகள் இருப்பு அறிய அந்த அலுவலகத்தை பொதுமக்கள் அணுகுகின்றனர். ஆனால் அவர்களுக்கு முறையான விவரங்கள் வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில் புதிய இணையதளம் ஏற்படுத்த வீட்டு வசதி வாரியம் முடிவு செய்த நிலையில் தற்போது tnhb.tn.gov.in என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை வாரிய தலைவர் பூச்சி முருகன் தொடங்கி வைத்த நிலையில் மக்கள் இதனை பயன்படுத்தி இனி விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் குறித்த விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.