தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏடிஎம் குடிநீர் மெஷின் வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக ஏடிஎம் குடிநீர் மிஷின் அறிமுகமாக இருக்கிறது.

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் விதமாக முதல் கட்டமாக 50 இடங்களில் ஏடிஎம் குடிநீர் மெஷின் வைக்கப்பட உள்ளது.

இதில் 150 ml மற்றும் ஒரு லிட்டர் என இரண்டு வகைகளில் தண்ணீர் வழங்கப்படும். இதனை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த ஏடிஎம் மெஷின் பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்களில் குடிநீரை பிடித்து பருகும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து ஏற்படுத்தி வருகிறது.