
ரேஷன் அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களாக உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இவர்கள் தனித்தனியாக நியாய விலை கடைகள் மூலமாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்த பிறகு அவர்களுக்கான நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது .
அதன்படி தமிழக அரசின் கடைகள் மூலமாக சுமார் 5.5 லட்சம் பேர் நிவாரண உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியானவர்களுக்கு நிவாரண உதவி தேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கணக்கெடுக்கும் பணி முடிவடைந்த நிலையில் உள்ளதால் விரைவில் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.