
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் உரிமை தொகை திட்டத்திற்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தற்போது அரசுக்கு புதிய சிக்கலாக மாறி உள்ளது. இதன் காரணமாக விளக்கம் அளிக்கும் வரை ஆயிரம் ரூபாய் காண விண்ணப்பங்கள் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளிட்டுள்ளது.