கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த திருப்பத்தூரை சேர்ந்த இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் அங்கிருந்த பொது மக்களிடம் மட்டும் நடந்த சம்பவங்களை கூறிவிட்டு சென்றுள்ளனர்.

ஊருக்குள் பரவிய தகவல் போலீசாருக்கு தெரிய வரவே அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை தேடி சென்று புகாரை பெற்றுக் கொண்டனர். அந்த பெண் புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரை 2 பேர் போலீசாரை கத்தியால் தாக்கியதால் அவர்களை  முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

அதாவது இதில் இரண்டு பேரை ஏற்கனவே கைது செய்த நிலையில் இரண்டு பேரை போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர்கள் தலைமறைவாக இருக்கும் இடம் போலீசாருக்கு தெரிய வரவே அங்கு சென்றனர். அப்போது குற்றவாளிகள் சுரேஷ் மற்றும் நாராயணன் இருவரும் போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில் அவர்களை சுட்டு பிடித்தனர். அந்த வாலிபர்கள் நால்வரும் போதையில் இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் காயம் அடைந்த இருவரையும் போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.