திருப்பூர் மாவட்டம் பனப்பாளையத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இவரும், இவரது நண்பருமான டைமண்ட் என்பவரும் பல்லடம் பகுதியில் மற்ற சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது 8 பேர் கொண்ட மர்ம நபர் கும்பல் காரில் வந்து இறங்கியது. திடீரென்று இவர்கள் இருவரையும் அந்த கும்பல் சுற்றி வளைத்தது. பின் அந்த கும்பல் வைத்திருந்த அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளைக் கொண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பரையும் சரமாரியாக வெட்டியது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அதன் பின் படுகாயமடைந்த 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு  தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.