
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடைவிடாது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.