
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றால் மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் திமுக அரசு மகளிர் உரிமை தொகையை உயர்த்தும் என்றும் 2000 ரூபாய் வரை மாதந்தோறும் பெண்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தன்னுடைய தேர்தல் ஸ்டேடர்ஜி என்னவென்று அனைவருக்கும் தெரியும் என்றும் அப்போது என் ஆட்டத்தை அனைவரும் பார்ப்பீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு ரேஷன் பொருட்கள் கீழே சிந்தியதில் 1900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை யாருமே கண்டுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கட்சியை கலைக்க திமுக சதி திட்டம் தீட்டுவதாகவும் தன் கட்சியில் உள்ள துரோகிகளை களையெடுக்க தற்போது திமுக உதவி செய்வதால் அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.