
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டை இருந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான பரிசீலனை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என்று தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைப்பதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக வெளியான செய்திக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாத எனவும் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.