
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசினார். அதாவது மக்கள் தொகை அடிப்படையிலான எல்லை நிர்ணயத்தின் மூலம் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்றும் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படலாம் என்றும் கூறினார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறு சீரமைப்பு என்பது மாநிலத்திற்கு ஒரு முக்கியமான பிரச்சனை. முன்னதாக உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினோம். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டதால் இதைப் பற்றி பேச விரும்புகிறேன்.
புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த பிறகு விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய குழந்தைகளுக்கு தமிழில் அழகான பெயர் சூட்ட வேண்டும். இதனால் மக்கள் தொகை அதிகரிக்கும். தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பிறகு நம் மாநிலத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் எல்லை நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இது ஒரு முக்கியமான பிரச்சனை. தமிழகத்தில் முன்பு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினோம். ஆனால் இப்போது அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் இதுவே மாநிலத்திற்கு பாதகமாக அமைந்து விடும் போல என்று கூறினார்.