தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை கொடிசியா மைதானத்தில் கொங்குநாடு தேசிய கட்சியின் சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்வை கண்டு மகிழ்ந்தார். பின்னர் நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அவர் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பெண்கள் என்றாலே சாதனைதான். இந்த ஆட்சியே பெண்களுக்கான ஆட்சி தான்.

உங்களுக்கும் தெரியும். மத்திய அரசு வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் நிலையில், வாக்களிக்காதவர் களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நம் அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டும் தமிழ்நாட்டிற்கு வேண்டியதை செய்திருந்தால் நாம் உலக அளவில் முன்னேறி இருப்போம். இருப்பினும் மத்திய அரசின் வஞ்சனையை கடந்த தமிழக முதல் இடத்தில் இருக்கிறது.

இது போன்ற சாதனைகளை திராவிட மாடல் அரசு தான் செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்ட நிலையில் இதுவரை தரப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தொகுதி மறு சீரமைப்பு குறித்து பேச நேரம் கேட்ட நிலையில் தரப்படவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை, புறக்கணிக்க வேண்டும்.

அவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை வருகிற தேர்தலில் மக்கள் நிரூபிக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் முழுமையாக வெற்றி பெற்றதற்கு காரணம் நம் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ். மேலும் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.