தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது.

ரேஷன் கடைகளில் தற்போது கைரேகை பதிவு மற்றும் கண் கருவிழி பதிவு போன்றவைகளின் மூலம் பொருட்கள் வழங்கப்படும் நிலையில் ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து குடும்பதாரர்களும் கட்டாயமாக கைரேகை பதிவு செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை.  அதன் பிறகு இ கேஒய்சி அப்டேட் செய்வதும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூஅன் 30-ம் தேதி ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கை ரேகை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, செல்போன் நம்பர் போன்றவற்றை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் ரேஷன் அட்டைகள் செல்லாது எனவும் ஒரு செய்தி whatsapp மூலமாக பரவி வருகிறது.

இதற்கான கால அவகாசமும் முடிந்து விட்டது என்று செய்தி பரப்பும் நிலையில் அதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டையில் இகேஒய்சி அப்டேட் செய்வது அவசியம் என்றாலும் அதற்கான கால நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை PHH, AAY சர்க்கரை அட்டைகள் இகேஒய்சி அப்டேட் செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு தங்கு தடை இன்றி பொருட்கள் வழங்கப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.