
தமிழக காவல்துறையில் தற்போது 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிதாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது டிஜிபி சங்கர் ஜிவால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி நியமனம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஐஜி அனிஷா உசேன் தற்போது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதே போன்று காவல்துறை கண்காணிப்பாளர் சர்வேஷ் ராஜ் கட்டுப்பாட்டு அறை சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.