
ஜூலை 7ம் தேதி சுபமுகூர்த்த நாளாக வருவதால், அந்த நாளில் நடைபெறும் அதிகளவான பத்திரப்பதிவுகளை கருத்தில் கொண்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் (வில்லைகள்) ஒதுக்கப்பட்டுள்ளன.
சுபநாள்களில் பொதுவாக ஆவணப்பதிவுகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த நாளான ஜூலை 7ம் தேதிக்காக, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 வில்லைகளுக்கு பதிலாக 150 வில்லைகள், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 வில்லைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேல், அதிக பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 முக்கிய அலுவலகங்களுக்கு, 100 சாதாரண வில்லைகளுடன் 12 தட்கல் வில்லைகளும், கூடுதலாக 4 தட்கல் வில்லைகளும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது பத்திரப்பதிவுகளை சுலபமாக மேற்கொள்ளும் வகையில், இவ்வாறு முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.