அவ கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டு தீர்ப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது , திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் கனமழையால் 1500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.