சென்னையில் இன்று காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சென்னை கோயம்பேடு மற்றும் திண்டுக்கல் மார்க்கெட்டுகளில் பூ விலையும் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று ஒரு கிலோ கேரட் 60 ரூபாய்க்கும், தேங்காய் மற்றும் உருளைக்கிழங்கு தலா கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளி விலை 27 கிலோ எடை கொண்ட பெட்டி 400 ரூபாயாக சரிந்துள்ளது.