
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசிக கட்சியின் பெண் கவுன்சிலர். இவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி அவரது கணவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் மனைவியைக் கொன்ற பிறகு கணவன் ஸ்டீபன் ராஜ் காவல் நிலையத்தில் தானாக சென்று சரணடைந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.