
கரூர் மாவட்டம் செம்மடை அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சென்டர் மீடியனைத் தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு சிறுவர், ஒரு குழந்தை மற்றும் ஓட்டுனர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதிய நிலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.