தமிழகத்தில் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப்படுவதால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பது இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிமுக, பாஜக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதனால் முதல்முறையாக நெல்லையில் பாஜகவின் கை ஓங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 23 தொகுதிகளில் பாஜக போட்டியிட நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல். முருகன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். மேலும் நயினார் நாகேந்திரன் மட்டும் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.