விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. மாநாடு முடிந்த கையோடு தனது அரசியல் செயல்பாடுகளில் விஜய் தீவிரமாக இறங்கிவிட்டார். நேற்று தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் ஒன்று மகளிர் உரிமைத்தொகை, பரிசுத்தொகை என ஒருபுறம் அறிவித்துவிட்டு மறுபுறம் மது கடைகள் மூலம் வருவாய் பெருக்குவது ஏற்புடையதல்ல என தமிழக வெற்றிக்கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விட, கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்று திட்டத்தை செயல்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.