
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களில் 55 லட்சம் பேரில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
அதில் இதுவரை வெறும் ஒன்பது லட்சம் பேர் மட்டுமே மேல்முறையீடு செய்துள்ளனர். அதாவது 46 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. சிலருக்கு தகுதி இருந்தும் மேல் முறையீடு செய்யப் போனால் அலைக்கழிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.