
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன் பிறகு தமிழ்நாட்டின் இன்று முதல் 6 மக்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதை நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது..