
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன் பிறகு இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காலை நேரத்தில் பனி மூட்டம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.