தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி தென்மேற்கு பருவமழையும் தொடங்கவுள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வருகிற 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயிரக்கூடும்.

மேலும் சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.