தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்பிறகு வருகிற 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை வங்கக்கடல் பகுதிகளில் துவங்கக்கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று வருகிற 13-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.