தமிழ்நாட்டில் இன்று (மே 19) அதி கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 21 தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தேனி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 21 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.