தமிழகத்தில் நடப்பு நிதியாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதிலும் குறிப்பாக 24 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்கப்பட்ட 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பதிவை முடித்து உரிமையாளருக்கு சான்றிதழை வழங்க வேண்டும் என மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பதிவிற்காக விண்ணப்பிக்கப்பட்ட நபருக்கு 24 மணி நேரத்திற்குள் பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும், தொழில் தொடங்கப்பட்ட ஆறு மாத கால இடைவெளிக்குள் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும், நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் முக்கிய இடத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும், சான்றிதழ் பதிவு செய்துள்ள விவரங்களில் மாற்றம் இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் புதுப்பித்து சான்றிதழை மாற்றி வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.