தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இரட்டை இலக்கத்தில் பதிவான கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100- ஐ கடந்து பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் நேற்று முன் தினம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 100% முக்கவசம் கட்டாயம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் தியேட்டர்கள், குளிர்சாதன அரங்கங்களில் இருப்பவர்கள் மாஸ்க் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக தெரிவித்துள்ளோம். அதே நேரத்தில் பொதுவெளியில் செல்வோருக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆனால் முதியோர்கள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோர் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.