
தமிழகத்தில் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து துறைகளிலும் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விவசாயத்திற்கும் மண்பாண்டம் தயாரிப்பதற்கும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளிலிருந்து கட்டணம் இன்றி களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க இன்று முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி இனி ஏரிகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு விண்ணப்பித்தால் கட்டிடம் இன்றி எடுத்துக் கொள்ளலாம்.