தமிழகத்தின் சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி நேற்று முன்தினம் கோவை மாவட்டம் கருமந்தம்பட்டி பகுதியில் விளம்பரப் பலகை அமைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக கோவை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகைகளை சாலையோரங்களில் வைக்கக்கூடாது என்றும் அதனை மீறினால் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் தற்போது தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலைகள்,உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நடைபாதைகள் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.