ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிற 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருஉத்தர கோசமங்கை கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜனவரி 25ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.