தமிழகத்தில் ,மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள பார்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.