
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்று உள்துறை செயலர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சமையலத்தில் செயல் தலைவர் மற்றும் ஆட்டோ டாக்ஸி தொழிலாளர் சங்க மத்திய துணை மாவட்ட தலைவருடன் மனு அளிக்கப்பட்ட நிலையில், ஓலா, ஊபர் மற்றும் பைக் டேக்ஸி ஆகியவற்றால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் சரிவை சந்தித்து வருவதால் 1.8 கிலோமீட்டர் குறைந்தபட்ச தூரமாக கணக்கிட்டு 25 ரூபாயும் அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 12 ரூபாய் வீதம் அமைத்து கட்டணம் கடந்த ஆட்சி காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த கட்டணம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அமையவில்லை என்பதால் எட்டு ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கட்டுனத்தை உயர்த்தி அமைக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்ட நிலையில் அதனை பெற்றுக் கொண்ட உள்துறை செயலர் அமுதா மீட்டர் கட்டண உயர்வு தொடர்பாக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே விரைவில் தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது.