தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மருத்துவ பரிசோதனை போன்ற தொடர் நடவடிக்கைக்காக உடல் சார்ந்த அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.

பிறவி குறைபாடு மற்றும் வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வளர்ச்சி குறைபாடு மற்றும் ரத்த சோகை உள்ளிட்டவற்றிற்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.