ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வாணிசத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நின்றது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்துமோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதன்படி ஒரு ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் ஆகியவைகள் அடுத்தடுத்து மோதியதில் ஆட்டோவில் இருந்த 9 வயது சிறுமி நிஜிதா என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அந்த ஆட்டோவில் கார்த்திக் என்பவர் தன் குடும்பத்துடன் சென்ற நிலையில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.