ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலந்தரா விலக்கில் நேற்று இரவு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியும் ஆம்புலன்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதன்படி அனீஸ், சாதிக் மற்றும் பாத்திமா ஆகியோர் விபத்தில் சிக்கி பலியாகினார். அதன் பிறகு 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்