
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10:00 மணி வரையில் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நெல்லை, தென்காசி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.