
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த வருடம் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான தேர்வு மையங்கள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. கடந்த முறை புகார்களுக்கு உள்ளான பள்ளிகளுக்கு நிகழாண்டு தேர்வு மையம் அனுமதி தரப்படவில்லை.
அதனைப் போலவே அங்கீகாரம் பெறாத மற்றும் முறையான வசதிகள் இல்லாத பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைப்பதற்கு அனுமதி இல்லை. இருந்தாலும் அங்கீகாரம் நீட்டிப்பு அனுமதி பெறாத பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளி மாணவர்களுக்கு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.