
திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஆண்டுக்கு சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக தற்போது திருச்சி விமான நிலையத்தை புது பொலிவுடன் விரிவாக்கம் செய்வதற்கு 951 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு 76 வெளிநாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயணிகளின் நலனை கருதி கூடுதலாக விமான சேவைகள் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திருச்சி விமான நிலையத்தில் இருந்து கொலம்பூருக்கு தினசரி மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு விமானமும் சிங்கப்பூருக்கு கூடுதலாக ஒரு விமானமும் இலங்கைக்கு கூடுதலாக ஒரு விமானம் மற்றும் வியட்நாம் நாட்டிற்கு வாரத்திற்கு கூடுதலாக மூன்று விமானம் என 31 விமான சேவைகள் கூடுதலாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் விமான சேவை செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது