
தமிழக ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. சமீபத்தில் தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜூலை 31ஆம் தேதியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.
இதனால் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன்படி தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே சிங் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு என்பது நிலவி வருவதால் தற்போது மத்திய அரசு ஆளுநரை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.